நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு சுமார் 11.20 மணியளவில் பயங்கர புழுதி புயல் தாக்கியது. ரோஹ்தக், பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட் மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியதில் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளது.
நொய்டாவில் மேலும் ஒரு ஆப்ரிக்க பெண் வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியின் புறநகர்ப்பகுதியான நொய்டாவில் ஆப்ரிக்கர்களை அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திவருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி நள்ளிரவு நைஜீரிய மாணவர்கள் நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் காரில் சென்றபோது, திடீரென வன்முறையாளர்கள் அவர்களை வழிமறித்து சராமரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நொய்டா: தெலுங்கானாவை சேர்த்த 21 வயது மாணவன் நொய்டா அமிட்டி பல்கலை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். சாய் கிருஷ்ணா நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைகழத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார். நொய்டா அமிடி விடுதி அறையில் சாய் கிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் சில நாட்கள்ளுக்கு முன் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டில்லி மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெளிச்சம் குறைவாகவே உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து செல்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.