ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். இதேபோல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.
சசிகலாவின் அவசரத்தால்தான் எம்ஜிஆரின் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது, இதே நிலை நீடித்தால் அதிரடி முடிவு எடுக்க தயங்கமாட்டேன் என நடிகை லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
எஎன்ஐ இடம் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
ஆட்சியமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு சுப்ரமணியம் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும், தமிழக பொறுப்பு ஆளுநரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
சசிகலா முதல் அமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை வண்டாடும் முதலில் ஓ. பன்னீர்செல்வத்தை மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று ஓ. பன்னீர்செல்வதிற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் சசிகலாவை நிராகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நேற்று முன்தினம் நடத்திய தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஆளுங்கட்சியான அதிமுக-வில், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக, மோதல் ஏற்பட்டுள்ளது. சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள சூழலில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.