ஆப்பிளின் தயாரிப்புகளான iPhone, iMac, iPad, Earpods போன்றவை இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்கப்படும் நிலையில், குறைந்த விலையில் உங்களின் ஐபோன் கனவை நனவாக்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள் நிறுவனம் தனது iPhone X-னை சந்தைப்படுத்த புதியதொரு முயற்சியை கையாண்டு வருகிறது. அதன்படி "Animoji" எனப்படும் வேடிக்கை வசதியினை தனது அடுத்த வரவான iOS 11.3-ல் உள்ளடக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று துவங்கியது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஐபோன் X விற்பனை துவங்கியுள்ளது.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் ஒருவர் தான் விரும்பும் ஐபோன் X வாங்க குதிரை சவாரி, மேள தாளத்துடன் சென்றுள்ளார். கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.
இந்தியாவிலும் ஏர்டெல் தளத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X விற்பனை இன்று முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கடந்த வாரம் முன்பதிவுகள் துவங்கிய நிலையில் ஐபோன் X ஸ்மார்ட்போனிற்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10,000 வரை கேஷ்பேக் மற்றும் ஜியோ பைபேக் சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் தளத்தில் ஐபோன் X முன்பதிவு செய்யப்படாத நிலையில் நேரடி விற்பனை மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 7.00 மணிக்குள் ஐபோன் X வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விலை:-
* ஐபோன் X விலை ரூ.89,000 (64 ஜிபி).
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.