நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மும்பையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணத்தால் சுமார் அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.
நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் அதன் ஓடுதளப்பாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனமழை காரணமாக ஓடுதளப்பாதை ஈரமாக இருந்ததால், விமானம் சற்று விலகி சேற்றில் சென்று சிக்கிக்கொண்டது.
இதனால், விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பதற்றமடைந்தனர். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
மும்பையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணத்தால் சுமார் அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.
மும்பையில் நேற்று காலையிலிருந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையையும் மழை வெள்ளம் ஆக்கிரமித்தது.
இதன் காரணமாக மாலை 6.49 மணிமுதல் இரவு 7.15 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டது. மும்பைக்கு வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 20 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன.
மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மும்பை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மோசமான வானிலை மற்றும் ஒடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மும்பை நகரத்திற்க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை வழக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பை வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கி இருக்கிறார். மழையில் சென்ற மாதவனின் கார் நடுரோட்டில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது. எப்படி இந்த மழை நீரை கடந்து வீட்டிற்கு செல்வேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக மும்பையில் கனமழை கொட்டி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் மும்பை மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வரும் நிலையில் இன்று காலை முதல் நீண்ட நேரத்திற்கு கனமழை பெய்ததால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும் கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சித்தாபூர், பரேலி, லக்னோ ஆகிய நகரங்கள் பெருமளவு பதிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.