இர்மா சூறாவளி கரீபியன் மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரிபிய தீவுகளை கடுமையாக தாக்கிய இர்மாவில் இருந்து மில்லியன் கணக்கான மக்களை காப்பதன் ஒரு முயற்சியாக கூகிள் நிறுவனம் தனது பங்களிப்பினை அளிக்கும் வகையினில் ’SOS Alerts’ எனப்படும் அவசர எச்சரிக்கை சேவையினை மேற்கொண்டு வருகிறது.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமிபத்தில் கூகிள் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அண்ட்ராய்டு ஓரியோவை) வெளிபடுத்தியது. வெளிப்படுத்திய நாள் முதல் எந்தெந்த மொபைல்களில் இந்த அண்ட்ராய்டு ஓ அம்சம் வரும் எனும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த குழப்பத்திற்கான விடை இதோ:-
கூகிள்
:
Pixel
Pixel XL
Nexus 5X
Nexus 6P
Nexus Player
சாம்சங்
கூகுள் தனது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பை (அண்ட்ராய்டு ஓரியோவை) அறிமுகப்படுத்தியது.
கூகிளின் புதிய பதிப்பானது "ஆண்ட்ராய்டு 8.0" அல்லது "அண்ட்ராய்டு ஓ" அல்லது "அண்ட்ராய்டு ஓரியோ" என பிரபலமான கிரீம் பிஸ்கடின் பெயரிடப்பட்டுள்ளது.
பிக்சல் மற்றும் நெக்ஸஸ் 5X / 6P கட்டமைப்புகள் கேரியர் சோதனைகளை துவங்கியுள்ளது.
நோக்கியா தொலைபேசிகள், ஹவாய், HTC, கியோசெரா, எல்ஜி, மோட்டோரோலா, சாம்சங், ஷார்ப் மற்றும் சோனி ஆகியவற்றின் வரவிருக்கும் மொபைல்களில் அண்ட்ராய்டு 8.0 நிரவப்பட்டு வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் உள்ள கூகுள் டூடுலில் இந்திய சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளது.
விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 71-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுலில் இந்திய தேசியப் பறவையான மயில் இருபுறமும் வீற்றிருக்க, அதற்க்கு நடுவில் அசோகச் சக்கரமும், மேலே பாராளுமன்றம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.
இணையத்தின் தேடல் ஜாம்பவானான கூகிள் இன்று சிறப்பு ஊடாடும் டூடில் மூலம் தனது ஹிப் ஹாப் வரலாற்றினை கொண்டாடிவருகிறது.
டி.ஜே. கூல் ஹெர்க் என்று பலராலும் அறியப்படும் கிளைவ் காம்ப்பெல் அவர்களின் நியூயார்க் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் 44வது ஆண்டு விழாவினை நினைவு கூறும் வகையில் இன்று கூகிள் தனது தேடல் தளத்தில் சிறப்பு ஊடாடும் டூடிலினை கட்சிப்படுதியுள்ளது.
காட்சி கலைஞர் சே ஆட்மஸ் மற்றும் படைப்பாற்றல் இயக்குனர் டிஃப் ஜாம் ஆகியோர் இந்த டூடில் லோகோ படத்தை வடிவமைத்துள்ளார்
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்லில் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும்.
இன்டர்நெட் உலகின் ஜாம்பவானான கூகிள் நிறுவனத்தில் சண்டிகர் மாணவர் ஒருவர் ரூ. 1.44 கோடி வருடாந்திர சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்லில் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும். இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தின் 16 வயது சிறுவனுக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது கூகிள்.
இன்டர்நெட் உலகின் ஜாம்பவானான கூகிள் நிறுவனத்தில் சண்டிகர் மாணவர் ஒருவர் ரூ. 1.44 கோடி வருடாந்திர சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
ஹர்ஷித் ஷர்மா என்ற சண்டிகரின் அரசாங்க மாடல் மூத்த உயர்நிலைப்பள்ளி (GMSSS) மாணவர், தனது 12 வது வகுப்பை தற்போது முடித்துள்ள நிலையில் கூகிள் நிறுவனத்தின் கிராபிக் டிசைனிங் பிரிவில் இணைந்துள்ளார்.
இந்த 16 வயதான இளைஞர் தன்னுடைய முதல் ஒருவருட பயிற்சி காலத்தில், ஒரு மாதத்திற்கு ரூ 4 லட்சம் வரை பெறுவார். அதன்பிறகு, மாதத்திற்கு ரூ 12 லட்சம் சம்பளத்தை பெறுவார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு வரவேற்றுள்ளது.
இந்த டூடுள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பந்து வீசுவது போன்றும் அதனை பேட்ஸ்மேன் அடிப்பதும், பீல்டர்கள் அதனை பிடிக்க முயல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக கூகிள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா கூகுள் 'குரோம்' என்ற சேவை வழங்கி வருகிறது, அந்த குரோம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கணினியில் இருந்து நமது உரையாடல்கள் கடத்தப்படுகின்றன என்று? கடத்தப்பட்ட உரையாடல்கள் கூகிள் நிறுவனத்துக்கு அனுப்படுகின்றன.
தனது மொழி அங்கீகாரம் மற்றும் தேடல் கருவிகளை மேம்படுத்த இவை உதவும் என கூகிள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறுகிறது.
தன்மய் பட் "ஆல் இந்தியா பேக்சாட்" என்ற காமெடி அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இவர் சிறந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலியா அல்லது சச்சின் டெண்டுல்கரா என்ற பெயரில் ஒரு காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளார். இதற்கு "சச்சின் வெர்சஸ் லதா சிவில் வார்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சச்சினும், லதா மங்கேஷ்கரும் பேசிக் கொள்வது போல சித்தரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.