பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு மக்கள் நல மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பட்டியலிட்டு அவை எவ்வாறு மக்களை சென்றடைந்துள்ளன என்பதை தமிழக முதல்வர் விளக்கினார்.
எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தின் ராமநாதபுரம்-தூத்துக்குடி பிரிவு (143 கி.மீ) சுமார் ரூ .700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (KMC), அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் ரூ .368.2 கோடி செலவிலான கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறுவிப்பு தற்போது நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியாகக்கூடும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் 30 நிமிடங்கள் உரையாடினார். திங்கள்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
அமீர் நடிக்கும் நாற்காலி படத்தின் எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். இந்தப் படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார்.
அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய தமிழக முதல்வர், தற்போதைக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று காணொலி மூலம் இதை துவக்கி வைப்பார்.
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் முக்கிய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வார இறுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் ரொக்க பணமும் பொங்கல் பரிசு பையும் விநியோகிக்கப்படும் என முதல்வர் இன்று தெரிவித்தார்.
இன்றுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.