சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன. கூட்டணிகள், தொகுதி ஒதுக்கீடுகள் என தமிழகத்து தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி (PMK) வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரும் அதிமுக கூட்டு ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானபோது பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸும் (Anbumani Ramadoss) உடன் இருந்தார்.
மூத்த பாமக (PMK) தலைவர்களான ஜி.கே. மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பின் போது சென்னையில் இருந்தனர். தொகுதிகளின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டமன்ற தேர்தல்களில் பாமக 30 தொகுதிகளை கோரியிருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தர்மபுரி, விருதுநகர் மற்றும் வன்னியர் மக்கள்தொகை அதிகம் உள்ள தமிழகத்தின் முக்கியமான வடக்குப் பகுதி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு திராவிட ஜாம்பவான் கட்சிகளான திமுக, அதிமுக-வுக்கு இடையில் மாறி மாறி கூட்டு சேரும் வரலாற்றைக் கொண்ட பாமக, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிட முடிவு செய்தது. இருப்பினும், தேர்தலில் அக்கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
ALSO READ: PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
இதற்கிடையில், பாஜகவும் சனிக்கிழமை அதிமுகவுடன் தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தையை நடத்தியது. அதிமுக பாஜகவுக்கு 15 தொகுதிகளை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தேசியக் கட்சியான பாஜக இன்னும் அதிகமான தொகுதிகளுக்கான கோரிக்கையை விடுத்துள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையில் இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
முன்னதாக, வெள்ளியன்று, தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வர சில நிமிடங்களே இருந்த நிலையில், தமிழக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியது. மிகவும் பின்தங்கிய வகுப்புகள் பிரிவில் உள்ள உள் இடஒதுக்கீடு பாமக-வின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடைசி நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றி அதிமுக, பாமக-வை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஏப்ரல் 6 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன. வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி நடகும். வழக்கத்தைப் போலவே இந்த முறையும் சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடிப்பதற்கான முக்கிய போட்டி திமுக மற்றும் அதிமுக-விற்கு (AIADMK) இடையில்தான் இருக்கும்.
ALSO READ: AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR