Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய தமிழக முதல்வர், தற்போதைக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
கொரோனா வைரசுக்கு எதிரான மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,006 அமர்வு தளங்களில் இது தொடங்கியது.
மக்களுக்கு மேலும் நிம்மதி அளிக்கும் வகையில், மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவிற்கு கிடைக்கும் என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்திய, பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.
ஜனவரி 16 முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை தொடங்க இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்த தடுப்பூசி இந்தியாவில் ₹ 200 என்ற விலையில் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா உலகை வழிநடத்துவதாக பாராட்டிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இதை நினைத்து தான் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி ஆய்வின் அடிப்படையில் 120 நாட்களுக்கு இதன் விளைவு தெரியும் என்று மருத்துவர் கிருஷ்ணா அல்லா கூறினார். ஆனால் அவரது சொந்த கருத்தில், தடுப்பூசியின் வீரியம் குறைந்தது ஒரு வருடமாவது இருக்கும் என்றார்.
COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.