இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன!
தமிழகம் முழுவதும் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்!
நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிவு தெரியும் வரை கர்நாடகா திரும்ப மாட்டோம் என காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தி MLA-க்கள் அறிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.