பெரியார் பிறந்தநாள் (Periyar) இனி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் (O.Pannir selvam) தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் கூட உதவி செய்யும் ஈகை குணத்தை அடிப்படையிலேயே கொண்டவரும் தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களாலும் அன்போடு கேப்டன்(Captain) என்று அழைக்கப்படும் விஜயகாந்த் (Vijayakanth) அவர்களின் 69ஆவது பிறந்த தினம் (Birthday) இன்று!!
மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்தவர்கள் தான் அமைச்சரவையில் 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளனர், என்றாலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முடியாத நிலை தான் உள்ளது.
ஈரானில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.
347 கோடி ரூபாய் செலவில், அரியலூர் தெற்கு கிராமத்தில் மொத்தம் 7 347 கோடி செலவில் கட்டப்படவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு NEET-2020 போட்டித் தேர்வுக்கான இணையதள (online) பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 8.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரைப்பட்டி கிராமத்தில் 1 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
சுமார் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (3.6.2020) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளித்திட 25 இருசக்கர வாகனங்களின் சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 இருசக்கர வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.