பிரபல விமான உற்பத்தி நிறுவனமான Airbus, தனது தொழிற்சாலையினை இந்தியாவில் துவங்கவேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அழைப்பு விடுத்துள்ளார்!
சமீபகாலமாக IndiGo விமானங்கள் எந்திர கோளாறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் நேற்றிரவு Vistara UK966 விமானமானது இந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கப் பட்டுள்ளது!
திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு சென்றது. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது விமானத்தின் டயர் வெடித்தது.
கடந்த மாதத்தில். கூகிளில் அதிகம் தேடப்படவர் பட்டியலில் இடம்பெற்றவர் அவனி சதுர்வேதி. இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மரவி நகரத்தில், பிலிப்பைன்ஸ் விமானப்படை வீசிய குண்டு தவறுதலாக சொந்த நாட்டு படைகள் மீது விழுந்ததில் 11 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
மாராவி தீவின் தெற்குப் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனை மீட்க, பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்துவருகிறது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானம் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தேஜஸ் போர் விமானம், உலகின் மிகவும் எடை குறைந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
முப்படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு விமானம் இயக்கும் பயிற்சியை வழங்குவதற்காக இந்துஸ்தான் டர்போ டிரெயினர் என்ற HTT-40 சிறிய ரக விமானத்தை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்க திட்டமிடப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த விமானத்திற்கான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிறகு 2015-ம் ஆண்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதல் HTT-40 பயிற்சி விமானத்தை தயாரித்து தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 12 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டது.
கடந்த மே மாதம் 19ம் தேதி 66 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதனிடையே எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் அருகே விமான பாகங்கள் மிதப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் ஒருபகுதியாக ஆழம் நிறைந்த மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருந்தனர் விசாரணை அதிகாரிகள்.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீச்சு நடத்துகின்றன. இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.