இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, நாளை சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி, சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்திய அணி தற்போது மிக வலுவாக அமைந்துள்ளது. நல்ல பார்மில் இருக்கும் தொடக்க வீரர் ஷிகர் தவான் இல்லாதது சற்று பின்னடைவு தான் என்றாலும், அவரது இடத்தை பூர்த்தி செய்வதற்கான வீரர்கள் அணியில் உள்ளனர். குறிப்பாக அஜிங்க்யா ரகானேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பைனல் வரை முன்னேறிய தீபா கர்மாகர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ரியோ நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் பைனலுக்கு தகுதி பெற்ற தீபா கர்மாகர், 4-வது இடம் பிடித்தார். மேலும் ஜிம்னாஸ்டிக் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் தீபா கர்மாகருக்கு கிடைத்தது. இந்நிலையில், அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிளாக்வுட் 62 ரன்னும், சாமுவேல்ஸ் 37 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அண்மையில் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்களின் தரத்தை உயர்த்த பல்வேறு புதுமையான யுக்திகளை கையாண்டு வருகிறார் அனில் கும்பிளே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.