பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி அதன் நோட் 12 தொடரை ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதுவரை மூன்று ஸ்மார்ட்போன்கள் வரிசையில் உள்ளன. அவை 5G இணைப்பை ஆதரிக்கின்றன. 4G இணைப்பை மட்டுமே ஆதரிக்கும் Redmi Note 12 என பெயரிடப்பட்ட மற்றொரு ஸ்மார்ட்போன் வரிசையில் சேர்க்கப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 30 அன்று அறிமுகம் செய்யப்படும்.
அறிமுகத்திற்கு முன், நிறுவனம் தொலைபேசியின் வடிவமைப்பைக் காட்டியது. தொலைபேசி புதிய பளபளப்பான நிறத்தில் காணப்படுகிறது. ரெட்மி நோட் 12 4ஜி யில் (Redmi Note 12 4G) என்னென்ன அம்சங்கள் கிடைக்கும்? இவற்றின் விவரக்குறிப்புகள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Redmi Note 12 4G: புதிய நிறத்தில் வரும்
Redmi Note 12 4G வடிவமைப்பை சியோமி (Xiaomi) நிறுவனத்தின் நிர்வாகி அறிமுகப்படுத்தியுள்ளார். Redmi Note 12 4G படத்தில் ஒளிமயமான அதாவது ஸ்பார்க்ளிங் நிறத்தில் காணப்படுகிறது. தொலைபேசியின் வண்ண வடிவமைப்பு அழகாக இருக்கிறது. நீலம், இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறங்கள் கலந்து இந்த புதிய வண்ணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற ஃபோன்களிலிருந்து மிகவும் வித்தியாசமாகவும் ஸ்டைலாகவும் தெரிகிறது.
Redmi Note 12 4G: வடிவமைப்பு
ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனில் ஒரு நிலையான செவ்வக கேமரா தொகுதி கிடைக்கிறது. இதில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. ஃபோனில் 50எம்பி பிரைமரி கேமரா உள்ளது என்பதை மாட்யூல் குறிப்பிடுகிறது. இடது பக்க விளிம்பில் ஒரு சிம் தட்டு உள்ளது. அதேசமயம் முன் திரை காட்டப்படவில்லை. இதன் காரணமாக முன்பக்க கேமரா எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
Redmi Note 12 4G: விவரக்குறிப்புகள்
ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) ஸ்மார்ட்போன், 120hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 685 SoC மூலம் இயக்கப்படும். புகைப்படம் எடுப்பதற்கு, இதில் 50MP+8MP+2MP சென்சார்கள் இருக்கும். முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமரா இருக்கக்கூடும். இந்த அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி இருக்கும்.
மேலும் படிக்க | மிகக்குறைந்த விலையில் boAt அறிமுகம் செய்த ஸ்டைலான Earbuds!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ