குழந்தைகளின் ஆயுட்காலத்தை கூட்டும் மாசு எதிர்ப்பு முகமூடி!

குழந்தைகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க, PureLogic ஆய்வகம், மாசு எதிர்ப்பு முகமூடி ஒன்றை வெளியிட்டுள்ளது.

Last Updated : Sep 6, 2019, 12:04 PM IST
குழந்தைகளின் ஆயுட்காலத்தை கூட்டும் மாசு எதிர்ப்பு முகமூடி! title=

குழந்தைகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க, PureLogic ஆய்வகம், மாசு எதிர்ப்பு முகமூடி ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லி-NCR போன்ற நகரங்களுக்கு மாசுபாடு என்ற ஒன்று, மிகுந்த கவலையாக மாறிட்டது. மாசுபாடு காரணமாக கோடைகாலத்தில் கூட மூடுபனி காணக்கூடிய நிலைமை உறுவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க, PureLogic ஆய்வகம், மாசு எதிர்ப்பு முகமூடி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த முகமூடியில் சுத்தமான காற்று பெற இருவழி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோட்டருக்கு மூன்று வேகக் கட்டுப்பாடுகள் பொறுத்தப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்தப்படலாம். இது தவிர, 11 HEPA, 5 வடிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டை பொறுத்தவரை, இது லித்தியம் பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும், மேலும் அதன் காப்புப்பிரதி 8 மணிநேரம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இதைப் பயன்படுத்த முடியும். அதில் சிலிக்கான் பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் முகத்தில் கச்சிதமாக பொறுந்தும் இந்த முகமூடி, 99.99% மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை காக்க உதவும் என தயாரிப்பாளர்கள் உறுதி தெரிவிக்கின்றனர். இந்த மாசு எதிர்ப்பு முகமூடியின் விலை ரூ. 3,490 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபாடுகள் நிறைந்த நகரங்களில் வசிக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தை காக்க இவ்வாறான தற்காப்பு கவசங்களை வாங்குவதில் பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Trending News