நாளை மிக முக்கியமான நாள்!! சந்திரயான் 2 நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும்

நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2 நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 19, 2019, 07:00 PM IST
நாளை மிக முக்கியமான நாள்!! சந்திரயான் 2 நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் title=

சென்னை: நாட்டின் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2 நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைகிறது. இந்திய விண்வெளி நிறுவனம் (ISRO) அளித்த தகவலின் படி, சந்திராயனின் திரவ என்ஜின் நாளை இயக்கப்பட உள்ளது. இது மிக முக்கிய தருணமாகும் எனத் தெரிவித்துள்ளது.

நிலாவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 என்ற விண்கலன் கடந்த 22 ஆம் தேதி விண்ணில் பாய்ந்தது.

புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 24 ஆம் தேதி முதல் வட்டப்பாதையை வெற்றிக்கரமாக கடந்தது. இதனையடுத்து அடுத்தடுத்து வட்டப்பாதையையும் வெற்றிக்கரமாக கடந்தது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலம், நாளை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் நாளை இயக்கப்பட உள்ளது. இது மிகவும் சவாலான மற்றும் முக்கியம்னா நகர்வு ஆகும். 

இதன் பின்னர், இஸ்ரோ விண்கலத்தின் திசையை நான்கு முறை (ஆகஸ்ட் 21, 28 மற்றும் 30 மற்றும் செப்டம்பர் 1) சுற்றுப்பாதையில் மாற்றப்படும். இதற்குப் பிறகு, அது நிலவின் துருவத்திற்கு மேலே 100 கி.மீ தூரத்தில் அதன் கடைசி சுற்றுப்பாதையை அடையும்.

பின்னர், செப்டம்பர் 2 ஆம் தேதி விக்ரம் லேண்டர் சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து சந்திர மேற்பரப்பில் சுற்றும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும்.

Trending News