Google Pixel 6, Pixel 6 Pro: கூகிள் அவ்வப்போது தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது, இவை பயனர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த வாரம் கூகிள் பிக்சல் 5 ஏ பற்றி அறிவித்தது. இதைத் தொடர்ந்து கூகுளின் பிக்சல் சாதனங்கள் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
டென்சர் என்ற தனிப்பயன் கொண்ட சிப்செட்டுடன் வரும் இந்த போன் பற்றி என்ன செய்தி பரவுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
சார்ஜிங்கில் ஒரு மெகா அப்டேட்
91 மொபைல்களின் டிப்ஸ்டரான யோகேஷ் பிரார், கூகுளின் (Google) பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ சாதனங்களின் சார்ஜிங் இப்போது மிக வேகமாக இருக்கும் என்று கூறுகிறார். கூகிளின் தலைமை அலுவலகத்தில் 33W சார்ஜிங் பிரிக்குகள் பயன்பாட்டில் இருப்பதை வட்டாரங்கள் கண்டறிந்ததாக அவர் கூறுகிறார். இதிலிருந்து இந்த பிரீக்குகள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
ALSO READ: Infinix Smart 5A: வெறும் ரூ.6499-க்கு அட்டகாச போன் அறிமுகம், முழு விவரம் இதோ!!
தற்போது, சந்தையில் உள்ள பிக்சல் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) வாடிக்கையாளர்களுக்கு 18W சார்ஜிங் வசதியை மட்டுமே வழங்குகின்றன. மேலும், பிக்சல் 6 பாக்சில் வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அற்புதமான புகைப்படங்களை எடுக்க வசதி
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பிக்சல் தொலைபேசிகளில் (Mobile Phone), இந்த போனின் கேமரா சிறப்பாக இருக்கக்கூடும் என்ற கருத்தை மக்கள் கொண்டுள்ளனர். பழைய மாடல்களை விட இரண்டு பிக்சல் 6 போன்களின் கேமராக்களும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் GN1 50MP சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இருக்கும். பிக்சல் 6 ப்ரோவில் 48 எம்பி சென்சார் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 4 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆகியவையும் இருக்கும்.
ALSO READ: Tech News: டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR