Tips and Tricks: குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பை செய்ய சுலபமான வழி

வாட்ஸ்அப் அழைப்பில் உங்கள் மொபைல் டேட்டாவின் விலை குறைவாக இருக்கும், அதற்கு இந்த எளிய தந்திரத்தைப் பின்பற்றவும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2022, 05:25 PM IST
  • குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பு
  • வீடியோ அழைப்பாக இருந்தாலும் கவலையில்லை
  • மொபைல் டேட்டாவைச் செலவிடுவது குறித்து கவலையே வேண்டாம்
Tips and Tricks: குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பை செய்ய சுலபமான வழி title=

வாட்ஸ்அப் அழைப்பில் உங்கள் மொபைல் டேட்டாவின் விலை குறைவாக இருக்கும், அதற்கு இந்த எளிய தந்திரத்தைப் பின்பற்றவும்.

வாட்ஸ்அப் அழைப்புகளைச் செய்யும்போது அதிக மொபைல் டேட்டாவைச் செலவிடுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். அழைப்புகளின் போது டேட்டாவை எவ்வாறு சேமிப்பது என்ற வழியை தெரிந்துக் கொள்ளுங்கள்.

WhatsApp அதன் பயனர்களுக்கு பல சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இந்த பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியுடன் செய்தி அனுப்புவதைத் தவிர, பயனர்கள் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளையும் செய்யலாம். 

மேலும் படிக்க  | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

இருப்பினும், இதற்கு இணையம் தேவை. மொபைல் டேட்டா குறைவாக இருப்பதால் பல நேரங்களில் வாட்ஸ்அப் கால் செய்வதைத் தவிர்க்கின்றனர். தங்கள் மொபைல் டேட்டாவை அழைப்பிலேயே செலவழிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். 

ஆனால் வாட்ஸ்அப் அமைப்புகளில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆடியோ அழைப்புகளின் போது அதிக டேட்டாவைச் சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மேலும் படிக்க | வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட்

வாட்ஸ்அப் அழைப்பின் போது டேட்டாவை சேமிப்பது எப்படி?
இதற்கு முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் திறக்கவும்.
இதற்குப் பிறகு வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
பின்னர் Setting ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இங்கே ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா (Storage and Data) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இதைச் செய்த பிறகு, நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள்.
அதிலிருந்து, அழைப்புகளுக்கு குறைவான டேட்டாவைப் பயன்படுத்த கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தை (use less data for calls) கிளிக் செய்யவும்.
இப்போது வாட்ஸ்அப் அழைப்புகளின் போது குறைவான மொபைல் டேட்டாவே செலவாகும்.

மேலும் படிக்க | அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 5 விளையாட்டு நட்சத்திரங்கள் 

இதேபோல், ஐபோன் பயனர்கள் குரல் அழைப்புகளைச் செய்யும்போது தங்கள் மொபைல் டேட்டாவையும் சேமிக்க முடியும்.

இதற்கு ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா (Storage and Data) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
மீடியா ஆட்டோ டவுன்லோடு (Media Auto Download) பகுதிக்குச் செல்லவும்.
வைஃபை இணைக்கப்பட்ட போது (when connected WiFi) என்ற விருப்பத்தை இங்கே இயக்கவும்.
வைஃபை மட்டும் இயக்கத்தில் இருக்கும் போதும் இது மீடியாவைப் பதிவிறக்கும்.
இது தவிர, புகைப்படத் தரத்திற்காக டேட்டா சேவர் (Data Saver) ஆப்ஷனையும் இயக்கலாம். இது உங்களுக்கு நிறைய மொபைல் டேட்டாவையும் சேமிக்கும். 

மேலும் படிக்க | லட்சக்கணக்கில் திடீர் போனஸ் கொடுக்கும் நிறுவனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News