அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு? – சீமான் கேள்வி

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று  கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2021, 01:56 PM IST
  • அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்?
  • ஆர். எஸ். எஸ்?
  • தமிழக அரசு?
அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு?  – சீமான் கேள்வி title=

சென்னை: உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல கேள்விகளை எழுப்புகிறார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார். 

SEEMAN

அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச்செயல்பாடுகளுக்கும் பாஜகவினர் பயன்படுத்த முனைவது வன்மையானக் கண்டனத்திற்குறியது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? என்று கேள்வி கேட்கும் சீமான், அத்துமீறிக் கோயிலுக்குள் உள்நுழைந்து பாஜகவினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை என்று கண்டனம் தெரிவிக்கிறார். 

READ ALSO | மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும் - சீமான்

இத்தகையச்செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது திமுக அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது. கோயில்களும், வழிபாட்டுத்தலங்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக் கூடங்களாக மாறும் என்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது என்று கண்டனம் தெரிவிக்கிறார் சீமான். 

பாஜகவை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து வாக்கு வேட்டையாடிய திமுக, தற்போது அதிகாரத்தில் இருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடித்தனம் என்று சாடுகிறார் சீமான்.

எனவே, இனிமேலாவது பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணைபோகாமல், கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பாஜகவினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ | தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News