சென்னை கிண்டியில் குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான
விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்தார். மேலும், வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கொள்கை மாற்றங்களை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022-23: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, முழு விபரம்
வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும் என்று தெரிவித்தவர், இதன் அடிப்படையில், சேத்துமடை, மணவணூர், தடியன் குடிசை மற்றும் ஏலகிரி ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2022: இளைஞர் நலன் மற்றும் செஸ் ஒலிம்பியாட் எவ்வளவு ஒதுக்கீடு
தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.