அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோ: கல்வித்துறை கூறுவது என்ன?

அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2020, 09:31 AM IST
அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோ: கல்வித்துறை கூறுவது என்ன? title=

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வி டிவியில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் காவி நிற உடையணிந்து இருந்துள்ளது. திருவள்ளுவரின் (Thiruvalluvar) உடை முழுவதும் காவி சாயத்தில் இருந்தது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் முன் இந்த நிகழ்ச்சி அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

ALSO READ | தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்தலாம்: செங்கோட்டையன்

6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பொருள் சார்ந்த ஒரு விளக்கத்தை அளிப்பதற்காக திருக்குறள் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது. இதில் தான் திருவள்ளுவரின் உருவம் காவி (Saffron) உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கல்வித்துறையில் (Education Minister) தொடர்ச்சியாக காவிமயமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கி.வீரமணி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும், கண்டனும் தெரிவித்திருந்தனர்.

ALSO READ | அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து: செங்கோட்டையன்!

 

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K. A. Sengottaiyan), ‘கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் ஒளிபரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒளிபரப்பட்டுவிட்டது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏற்கனவே ஒரு முறை பாரதியாரின் (Bharathiyar) உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திருவள்ளுவர் தினத்தில் மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News