மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு புதுத்திட்டம்!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 11, 2018, 07:01 PM IST
மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு புதுத்திட்டம்! title=

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

தற்போது தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு, மணல் கொள்ளையும் அதிகரித்துகொண்டே வருகிறது. ஆற்றுமணலினை முறையின்றி அதிக அளவில் அள்ளுவதாலும், நீர்மட்டம் குறைவதாலும், மணல் விலை உயந்துகொண்டே போனதாலும் கட்டுமானப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு கட்டுமாண தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இந்நிலையில் மணல் கொள்ளை சம்பந்தமாக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் தமிழக அரசு பொதுப்பணித் துறை மூலம் மணல் குவாரிகளை இயக்கி வருகின்றது.

எனினும் பல ஆற்றுப்படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு தான் வருகின்றது. இதனை கண்டுகொள்ளாத தமிழக அரசு இருக்கிறது. அதுமட்டுமல்லமல் பொதுப்பணித் துறையின் மூலம் இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ளலாம், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரை மணல் அள்ளக்கூடாது, குறிப்பிட்ட அளவு மணல் தான் எடுக்கு வேண்டும் என பல விதிகள் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த விதிமுறைகள் எல்லாம் சரிவர பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மணல் கொள்ளை முறைகேட்டினை தடுக்க CCTV கேமிரா, ஆன்லைன் பதிவு, லாரியில் GPS பொறுத்துவது உள்ளிட்ட யுக்திகளை கையாள தமிழக அரசு திட்டுமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!

Trending News