கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பிரதமருக்கு கடிதம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். ஊரடங்கு உத்தரவால் சிறு குறு, நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், கடனுக்கான வட்டியை கட்ட முடியாத நிலை உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிறுவனம் நிவாரணம் அளித்துள்ளது. வேலை இழந்த தொழிலாளர்கள் 15 கிலோ அரிசி, பருப்பு சமையல் எண்ணெய் இலவசமாக வழங்குகிறது. ஊரடங்கு நீக்கப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஊதிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இரு மாதங்கள் ரேஷன் அரிசி வழங்கப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்களுக்கு கடிதம்!#Corona #coronavirus #TNGovt #TN_Together_AgainstCorona #TamilNadu pic.twitter.com/BKTzafqS0g
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 25, 2020
தமிழகம் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளதால் சிறப்பு நிதியாக 4000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியை 500 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். 27 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக 500 கோடி வழங்க வேண்டும். சிறு குறு வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டி அபராதத்தை 2 காலாண்டு தள்ளுபடி செய்யவேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.