தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்படும்.
இந்த ஊரடங்கு (Lockdown) காலத்தில் மருத்துவமனைகளுக்கு அல்லது மருந்து கடைகளுக்கு செல்வது சாத்தியம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கிலும் மக்களுக்கு எளிதில் மருந்து கிடைக்கும் வண்ணம், தமிழ்நாடு மொத்த மருந்து (Medicine) விற்பனையாளர் சங்கம் புதிய முயற்சியை ஈடுபட்டுள்ளது.
ALSO READ | அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்!
அதன்படி தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் உள்ள சுமார் 40 ஆயிரம் மருந்து விற்பனையாளர்களை இணைத்து வாட்ஸ் ஆப்பில் (Whatsapp) கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று மருந்து விநியோகம் செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட எந்த மருத்துவ தேவையாக இருந்தாலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி மருந்து மற்றும் மருத்துவ தேவை இருந்தால் உடனடியாக 9342066888 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வீட்டுக்கே கொண்டு வந்து மருந்துக்ள் தரப்படும் என்றும், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மருந்து பொருட்களில் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும். மேலும் இந்த பணிக்காக 2 லட்சம் ஊழியர்கள் களமிறங்கவுள்ளனர் என்றும் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ALSO READ | தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR