சென்னை: மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், தெற்கு கேசவபுரம் பகுதியில் வசித்து வந்த 23 வயதான மகேஸ்வரன் (த/பெ.ராதாகிருஷ்ணன்) என்பவரை 04.9.2021 அன்று இரவு முதல் காணவில்லை என அவரது தாய் 05.9.2021 அன்று E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, ‘ஆண் காணவில்லை’ என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 07.9.2021 அன்று E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் ஒரு ஆணின் இறந்த உடல் கரை ஒதுங்கியது. E-5 பட்டிணப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மேற்படி இறந்த ஆண்நபரின் விவரங்கள் மற்றும் புகைப்படம் சுற்றுப்புற காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து E-4 அபிராமபுரம் காவல் குழுவினர் (TN Police) மகேஸ்வரனின் தாயாரிடம் மேற்படி இறந்த ஆண் நபரின் புகைப்படம் மற்றும் உடைகள் குறித்து தகவல் தெரிவித்து, நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். இறந்த நபர் மகேஸ்வரன்தான் என்பது அவரது தாயார் உறுதி செய்தார்.
அதன்பேரில், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் காணாமல் போன பிரிவில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு கொலை உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டது. E-4 அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், இறந்து போன மகேஸ்வரன் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், அடிக்கடி வீட்டருகே ஆள்நடமாட்டம் இல்லாத மறைவான இடங்களில் போதையில் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, மேற்படி மகேஸ்வரனை கொலை செய்த 1.கார்த்திக், வ/23, த/பெ.சுகுமார், எண்.136, அன்னை தெரசாநகர் 6வது தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, 2.மணி (எ) மணிகண்டன், வ/19, த/பெ.குமார், ராஜிவ்காந்தி தெரு, மேடவாக்கம், சென்னை, 3.விக்கி, வ/24, த/பெ.ரமேஷ், எண்.135, அன்னை தெரசா நகர் 6வது தெரு, ராஜா அண்ணாமலைபுரம், 4.தர்மா (எ) தர்மரசு, வ/23, த/பெ.சம்பளவண்ணன், அறிஞர் அண்ணா நகர் 3வது தெரு, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய 4 நபர்களை நேற்று (08.9.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் மற்றும் 10 டைடல் பிளஸ் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ALSO READ: யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை
விசாரணையில், சம்பவத்தன்று (04.9.2021) மகேஸ்வரன் மேற்படி மறைவான இடத்தில் போதையில் இருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் (Drugs) னக் கூறியதும், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மகேஸ்வரனை மிரட்டி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, மகேஸ்வரன் வீட்டில் வைத்திருந்த உடல்வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டு திரும்பி, பின்னர், அதே மறைவான இடத்திற்கு மகேஸ்வரனை அழைத்து வந்தனர். பின்னர், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், விக்கி, தர்மரசு, சதீஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மகேஸ்வரனை கத்தியால் தாக்கி கொலை செய்து, மகேஸ்வரனின் உடலை அடையாறு, திரு.வி.க.பாலம் அடிப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் குற்றவாளி கார்த்திக் மற்றும் விக்கி ஆகியோர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதும், மணி (எ) மணிகண்டன் மீது 3 கொலை (Murder) வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட கார்த்திக் உட்பட 4 நபர்களும் 08.9.2021 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேற்படி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 5.சதிஷ், வ/19, த/பெ.மோகன்ராஜ், அன்னை தெரசா நகர் 5வது தெரு, ராஜா அண்ணாமலைபுரம் என்பவரை நேற்று (09.9.2021) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள சூர்யா என்பவரை பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.
விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி சதிஷ் நேற்று (09.9.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட உள்ளார்.
ALSO READ:நடிகை தூக்கிட்டு தற்கொலை; வெளியான Shocking காரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR