வரும் 7ம் தேதி செம கனமழை! தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Last Updated : Oct 4, 2018, 11:52 AM IST
வரும் 7ம் தேதி செம கனமழை! தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!  title=

தமிழகத்திற்கு வரும் 7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும் என இந்தய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 25 செமி மேல் மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தி சென்னை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும். 
  • தென்கிழக்கு அரபிக்கடலில் வரும் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், பின்னர் அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்.
  • தென் மேற்கு வங்க கடலில் வரும் 8-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். எனவும் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போது தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது!

Trending News