பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை, பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அன்பில் மகேஷ்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் அச்சத்தை அகற்றும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2021, 05:15 PM IST
பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை, பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அன்பில் மகேஷ் title=

சென்னை: தமிழகத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கவுள்ளன. எனினும், இன்னும் பல மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிகளுக்கு செல்வது குறித்து அச்சமும் பதட்டமும் உள்ளது. 

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கையும், உயிர் சேதமும் பீதியை உண்டு பண்ணியது. இதையடுத்து கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் பிறப்பிக்கப்பட்டன. 

பல வித கொரோனா (Coronavirus) எதிர்ப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செயல்முறை ஆகியவற்றின் காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதை அடுத்து, அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளிலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று, அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டன. 

ALSO READ: நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்

9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு முடிவெடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் அச்சத்தை அகற்றும் வகையில், அன்பில் மகேஷ் (Anbil Mahesh) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். 

‘பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்!' என்று அவர் கூறியுள்ளார். 

அனைத்து பள்ளிகளும் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட சி.இ.ஓ கண்காணிப்பிலும் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அளிக்க பள்ளிகளில் முகக்கவசங்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் உளவியல் ரீதியாக தயார் ஆன பிறகே பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு (TN Schools)  வர வேண்டும் என அரசு குறிப்பிடவில்லை. பெற்றோர் தங்கள் சொந்த விருப்பத்தில் மாணவர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

ALSO READ: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News