சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை எனவும், புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர் என்றும் குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டதாகவும், இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 25 லட்ச ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமெனவும், இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ‘தேர்தல் முடிஞ்சு இவ்ளோநாள் ஆகியும் இன்னும் திறக்கலையா!’
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR