தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:- வரும் 16-ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். வரும் 22-ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) September 13, 2016