திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது -திருமா!

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகளை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 6, 2019, 07:00 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது -திருமா! title=

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகளை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்!

சென்னை கலைவாணர் அரங்கில் உலக தமிழர் திருநாள் 5-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என தெரிவித்துள்ளார். 

கஜா புயல் பாதிப்பிற்கு ஆளான மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிக்காமல் அங்கு தேர்தல் நடத்துவது என்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும் விஷயம் என தெரிவித்துள்ளார்.

தற்போது திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு பின்னர்  தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதிமுக-வை சேர்ந்த வைகை செல்வன், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் திமுக அச்சத்திலும் பதற்றத்திலும் இருக்கிறது என விமர்சித்தார்.

கட்சிகளுக்கு இடையே திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து காரசார விவாதங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ‘புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், தேர்தல் நடத்தினால் உளவியல் ரீதியாக பிரச்னையை உண்டாக்கும்’  என குறிப்பிட்டுள்ளார்.

Trending News