உடல் எடையுடன் மூட்டு வலி உள்ளவர்கள் வாக்கிங் செல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
உடல் உழைப்பு ஏதும் இல்லாமல் பருமன் ஏற்படுகிறது என்பதால் மருத்துவர்கள் குறைந்தபட்சம் வாங்க்கிங்காவது செல்லுங்கள் என்று கூறுகின்றனர். உடல் பருமனை குறைக்க வேண்டும், ஆனால் வாங்க்கிங் சென்றால் மூட்டு வலி அதிகமாக ஏற்படுகிறது என்பவர்களுக்கு வாங்க்கிங் செல்லாமல் எப்படி உடல் பருமனை குறைப்பது எனது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
எடையை பராமரிப்பத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக தற்போதைய காலத்தில் உடல் உழைப்பு அதிகம் இல்லாமல் பலர் வேலை பார்த்து வருகிறோம். எனவே அவர்களுக்கு முறையாக உணவு தேவை.
குறைந்த கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ள முயற்சியுங்கள்.
மூட்டு வழி உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யலாம். நீச்சல் செய்வதால் உடல் பாரம் கால் மூட்டில் விழாது. இதன் காரணமாக மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டு வலி அதிகரிக்காது.
சைக்கிளிங் செய்யும்போது ஓட்டுமொத்த உடல் எடையும் சைக்கிளின் சீட்டில் விழும். இதனால் மூட்டில் எடை விழாது. மேலே குறிப்பிட்டது போல தேய்மானம் மற்றும் வலி அதிகரிக்காது.
உடல் பருமனுடன் மூட்டு வலி உள்ளவர்கள் உணவுமுறை, நீச்சல் மற்றும் சைக்கிளிங் செய்தால் உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடை குறையும்போது மூட்டு வலியும் குறைந்து விடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)