சென்னை: முதுமலை புலிகள் காப்பகத்தில் (Mudumalai Tiger Reserve(MTR)) இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது
அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியின் பெயரை 'MDT 23' என வைத்திருக்கின்றனர். இந்த 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புலி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் புலியின் வேட்டை அதிகமாகியுள்ளதாக தமிழக வனத்துறையினர்ர் கூறுகின்றனர். செப்டம்பர் 24 அன்று, இந்த புலி ஒரு நபரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதைக் கண்காணிக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் கைப்பற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Also Read | ஆட்கொல்லியான புலி : அச்சத்தில் மக்கள்
இருப்பினும், நிலப்பரப்பு, சீரற்ற வானிலை மற்றும் உள்ளூர் மக்களின் இடையூறுகள் காரணமாக புலியை இதுவரை பிடிக்க முடியவில்லை. ஆனால், தொடர்ந்து புலி பல கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடியது. இந்த நிலையில் மற்றொரு நபரையும் கொன்றது. புலி ஒருவரை அடித்துக் கொன்றாலும், அவரையாக இரையாக உட்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புலி மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால், உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் கள அதிகாரிகளின் அறிக்கைகள், டாக்டர். சேகர் குமார் நிராஜ், முதன்மை தலைமை வனக்காப்பாளர் மற்றும் தலைமை வனவிலங்கு வார்டன் ஆகியோர் கலந்தாலோசனை மேற்கொண்டு 'வேட்டை ஆணை' (Hunting Order) வெளியிட்டனர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority(NTCA)) வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த ஆணை நிறைவேற்றப்பட வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 11 (1) (a) ன் கீழ், புலி 'MDT 23' ஐ வேட்டையாட MTR இன் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு அதிகாரம் அளிக்கிறது.
Also Read | புலியுடன் போராடி உயிர் தப்பித்த வீரர்; குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள்
கேரள வனக் குழுக்களின் உதவியுடன் நடத்தப்படும் இந்த முழு நடவடிக்கையும், சிறப்புப் பணிக்குழு உத்தரவுப்படி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.
"இது மனிதனை உண்ணும் புலி அல்ல, துரதிருஷ்டவசமாக மக்கள் கொல்லப்படுகின்றனர். விடுக்கப்படும் எச்சரிக்கைகளை புறக்கணித்து மக்கள் புலி நடமாடும் காடுகளுக்குள் நுழைந்தனர்.
தற்போது வழங்கப்பட்டிருப்பது துப்பாக்கிச் சூடு உத்தரவு அல்ல, எங்கள் முதல் முன்னுரிமை புலியைப் பிடித்து அதை பாதுகாப்பது தான். ஆனால், நிலைமையை பொருத்து, வேட்டை ஆணை பயன்படுத்தப்படும். அது கடைசி முயற்சியாகத் தான் இருக்கும் ”என்று டாக்டர் நிராஜ் ஜீ மீடியாவிடம் தெரிவித்தார்.
Also Read | துணிச்சலின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!!
புலியை பிடித்தால், அதன் பிறகு எதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விசாரித்தோம். கால்நடை மருத்துவ நிபுணர் புலியை பரிசோதனை செய்வது தான் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும்,
அதைத் தொடர்ந்து, புலியை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றலாம் அல்லது வேறு என்ன செய்யலாம் என்பது நிலைமையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
வயது வந்த ஆண் புலிகள் கால்நடைகள் மற்றும் பிற சிறைப்பிடிக்கப்பட்ட இரையை வேட்டையாடுவது மிகவும் அரிதானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். புலியை பிடிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முடிந்தவுடன், இதன் பின்னணியைக் கண்டறிய அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read | காயமடைந்த புலி குட்டியை மீட்டு சிகிச்சையளிக்கும் தமிழக வனத்துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR