கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும் ,சுஷ்விகா மோள் என்ற 4வயதான மகளும், சுஷ்வின் சிஜோ மற்றும் சுஜிலின் ஜோ என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான சுரேந்திரன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துண்புறுத்தி வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்றும குடித்துவிட்டு வந்த சுரேந்திரன் வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்து பயந்துபோன குழந்தை சுஷ்விகா மோள் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று ஒளிந்துகொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வைத்து எதிர்பாரா விதமாக விஷபாம்பு ஒன்று சுஷ்விகா மோளை கடித்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?
ஆனால் குழந்தை சுஷ்விகா மோள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் வந்த தந்தைக்கு பயந்து ஒளிந்துகொள்ள முயற்சித்த 4 வயதேயான சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இடையே தந்தைக்கு பயந்து சிறுமி உட்பல குழந்தைகள் மூன்றுபேரும் ஒளிந்திருந்தபோது அவர்களை கையில் வைத்திருந்த செல்ஃபோனில் வீடியோ எடுத்து அதன் வாயிலாக பேசியுள்ளனர். அப்போது அந்த சிறுமி அழுதுகொண்டே அப்பா அடிச்சு வெளிள தள்ளிட்டாரு.. எங்களுக்கு யாராச்சும் உதவி பன்னுவீங்களா என கேட்டவாறு பேசியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் குடிபோதை ஆசாமிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR