தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு

Extra Holiday For Diwali: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 19, 2024, 01:25 PM IST
  • தீபாவளி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
  • வெள்ளிக்கிழமை தற்போது விடுமுறை அறிவிப்பு.
  • சனி, ஞாயிறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு title=

Bonus Holiday For Diwali In Tamil Nadu: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறையை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அக். 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அக்.31ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இதன் பொருட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொள்ளும் வகையில், தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவ.1ஆம் தேதி கொடுக்கப்படும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதியை பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குஷியில் மாணவர்கள்

தீபாவளி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் நிலையில், வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளதால் அடுத்த சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை சேர்த்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தம் 4 நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் எனலாம். இதனால், சொந்த ஊர் திரும்பும் மக்கள் தங்களது உறவினர்களுடன் கூடுதலாக இரண்டு நாள்களை மகிழ்ச்சியுடன் செலவிடலாம் என நெட்டிசன்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..

இந்த வாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை விடப்பட்டது. இன்றும் கூட புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்திலேயே காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் சற்று தாமதமாகவே பள்ளிகள் திறந்தன. அதேபோல், ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை என விடுமுறைகள் இந்த அக்டோபர் மாதத்தில் அதிகம் இருந்தன. இந்நிலையில் நவம்பர் மாத தொடக்கத்திலேயே மூன்று நாள்கள் விடுமுறை கிடைத்திருப்பதால் மாணவர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மாணவர்கள் எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்தளவிற்கு ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதற்கு காரணமும் தமிழ்நாடு அரசுதான். ஆம், மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்கியது போலவே, தமிழ்நாடு அரசும் 2024 ஜூலை 1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிடப்பட்டுளஅளது. 

இதனால், 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 3 சதவீதம் உயர்ந்து 2024 ஜூலை 1ஆம் தேதி முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் 1,931 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவீனம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News