இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவிக்கையில்... சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது
கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
#Tamilnadu #weather Rainfall occurred at a few places over Tamilnadu pic.twitter.com/L3IXQ9c3Hm
— TN SDMA (@tnsdma) December 23, 2018
எனவே மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக, நாகை மாவட்டம் ஆனைக்காரன்சத்திரத்தில் 4 செ.மீ. மழையும், சிதம்பரம், பாம்பனில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.