வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முயற்சி வாபஸ்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தலைமை வன விலங்கு பாதுகாவலர் நீரஜ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 04:53 PM IST
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முயற்சி வாபஸ்! title=

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தலைமை வன விலங்கு பாதுகாவலர் நீரஜ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், "இந்தியாவின் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது.  இந்த பறவைகள் சரணாலய எல்லையிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள சன்பார்மா, மருந்து ஆலை நிறுவனம் தனது ஆலை உற்பத்தித் திறனை அதிகரிக்க 2020, மே மாதம் விண்ணப்பம் செய்தது.  இந்த மருந்து ஆலைக்காகத்தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவு குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

ALSO READ | பெண்களின் திருமண வயதில் மாற்றம்! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் விரைவில்

ஆனால் நிறுவனமும், வனத்துறையும் அக்குற்றச்சாட்டை மறுத்தன.  அதே நேரத்தில் சரணாலய பரப்பளவைக் குறைப்பதற்காக வனத்துறை கூறிய காரணங்கள் எதுவும் நம்பும் படியாகவே இல்லை.  இந்த சரணாலயத்தின் எல்லையைக் குறைக்க பல நிறுவனங்கள் சட்ட விரோதமான முறையில் முயற்சிகள் மேற்கொண்டனர்.

vedanthangal

ஒவ்வொரு வருடமும் முழுவதும் எடுக்கப்படும் கணக்கெடுப்பின்படி சுமார் 28,000 வகையான பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வருகிறது என்பது தெரியவந்தது.  இந்நிலையில் இதன் பரப்பளவு குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் பறவைகளின் வாழ்விடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்.  அதனால் இந்த திட்டம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதால் வாபஸ் பெறுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | விசாகப்பட்டினம் டூ கம்பம் கொரியரில் வந்த கஞ்சா பார்சல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News