முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை கடந்த அதிமுக அரசு அமைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்
எனினும் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலம் பின்னர் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த விசாரணையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ மருத்துவர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசு பொறுப்பேற்ற பின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்த நிலையில், இபிஎஸ் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 24-ம் தேதியுடன் ஆணையத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதற்குள்ளேயே அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G