சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் வேண்டும் என சசிகலா முன்னதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவில் குளறுபடி இருந்ததால் சிறை நிர்வாகம் அதனை
தள்ளுபடி செய்தது. மீண்டும் நேற்று முன்தினம் பரோல் கேட்டு சசிகலா தரப்பில் சரியான விளக்கங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சசிகலா பரோல் மனுவினை அடுத்து கர்நாடக சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், சசிகலா பரோலில் விடிவிக்கப்பட்டால், அவரின் பாதுகாப்பு மற்றும் அவர் தங்குமிடம் குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் கேட்டு கடிதம் அனுப்பியது.
இதனையடுத்து, சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் எந்த ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தரப்பில் அறிவித்து.
இந்த அறிவிப்பினால் சசிகலாவின் பரோல் உறுதியான போதிலும், நேற்றைய தினம் கர்நாடகாவில் விடுமுறை என்பதால், அவருக்கு பரோல் வழங்குவது தொடர்பான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப் படவில்லை.
எனவே சசிகலா பரோல் உத்தரவு இன்று (வெள்ளி) பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. எனவே பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.