Tanmay Agarwal: அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஹைதராபாத் வீரர் தன்மய் அகர்வால் 147 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். செகந்திராபாத்தில் உள்ள NFC கிரிக்கெட் மைதானத்தில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான 2023-24 ரஞ்சி டிராபி போட்டியில் ஹைதராபாத் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 529/1 என்ற இமாலய ஸ்கோரில் உள்ளது. ஹைதராபாத் தொடக்க ஜோடி ராகுல் சிங் கஹ்லாட் 105 பந்துகளில் 185 ரன்களுக்கு வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 449 ரன்களை சேர்த்து, இது முதல் தர கிரிக்கெட்டில் இந்திய ஜோடியின் ஐந்தாவது சிறந்த பேட்டிங் ஆகும்.
Tanmay Agarwal hit the fastest triple-century in the history of first-class cricket.
323* (160) - 33 (4s) & 21 (6s) vs Arunachal Pradesh.
PC: BCCI pic.twitter.com/ljP6LoBQ2a
— Cricbuzz (@cricbuzz) January 26, 2024
மேலும் படிக்க | அஸ்வின் மகத்தான சாதனை..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலர் என்ற அந்தஸ்து
முதல்தர கிரிக்கெட் போட்டியில் 150 பந்தில் டிரிபிள் சதம் அடித்தது இதுவே முதல் முறை ஆகும். முதன் முறையாக 'முதல் தர' கிரிக்கெட் போட்டி 1772ல் விளையாடப்பட்டது, சுமார் 252 ஆண்டுகளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இதுவே முதல் முறை. இது ஒரு வரலாற்று சாதனை என்று கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு முதல் மார்கோ மரைஸ் வைத்திருந்த முந்தைய சாதனையை தன்மய் அகர்வால் முறியடித்து முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் என்ற சாதனையை படைத்தார். தன்மய் அகர்வால் மொத்தமாக 33 பவுண்டரிகள் மற்றும் 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் பெற்றுள்ளார் தன்மய் அகர்வால். முன்னதாக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை இஷான் கிஷன் வைத்து இருந்தார். மேலும் தன்மய் அகர்வால் ரஞ்சி வரலாற்றில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தன்மய் அகர்வால் 160 பந்துகளில் 323 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அகர்வால் அதிவேக முதல் தர இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். அவர் 119 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். 1985ல் பரோடாவுக்கு எதிராக 123 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய ரவி சாஸ்திரியின் முந்தைய சாதனையை இதன் மூலம் முறியடித்தார்.
HISTORY BY HYDERABAD'S TANMAY AGARWAL...!!!
A triple century in a Ranji Trophy match in just 147 balls with 20 sixes. An absolute onslaught by Tanmay against Arunachal Pradesh. pic.twitter.com/YHxGw4Yr3X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 26, 2024
ஒட்டுமொத்தமாக, முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது அதிவேக இரட்டை சதமாகும். அதே போல தன்மய் அகர்வால் 2வது நாளில் 443 ரன்களை எட்டினால், அதிக முதல் தர ஸ்கோரைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். 1948ல் மகாராஷ்டிராவுக்காக 443* பதிவு செய்த பௌசாஹேப் நிம்பல்கர் தற்போதைய சாதனையாளர் ஆவார். ஒட்டுமொத்த சாதனையை 1994ல் பிரையன் லாரா (501*) வைத்துள்ளார், இதுவும் முறியடிக்கப்படலாம்.
மேலும் படிக்க | கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ