IPL 2020: இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்பதை அணியின் கேட்பன் ராகுல் டிராவிட் அம்பலப்படுத்தியுள்ளார். மும்பை இண்டியன்ஸ் அணியின் வீரர்கள், தங்கள் திறமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்தினார்கள். முன்னணி வீரர்கள் தங்கள் திறமையை தக்க வைத்துக் கொண்டது
டன், இளம் மற்றும் திறமையான வீரர்களுடன் கலந்து விளையாடினார்கள், இது தான் அணியின் வெற்றியின் ரகசியங்களில் பிரதானமான ஒன்று என இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில், துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இண்டியன்ஸ் அணி, உயர்தர வீரர்களை ஏலத்தில் எடுத்திருப்பதே மற்றுமொரு வெற்றிக்கான காரணம் என்று இரண்டாவது காரணத்தையும் டிராவிட் சுட்டிக்காட்டினார்.
"கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் மும்பை அணி, உயர்தர வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதோடு நல்ல திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களையும் அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறது" என புத்தகம் ஒன்றின் மெய்நிகர் வெளியீட்டில் (virtual launch) கலந்துக் கொண்ட ராகுல் டிராவிட் கூறினார்.
“ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்டிக் பாண்ட்யா என பல இளம் வீரர்களை மும்பை இண்டியன்ஸ் அணி கண்டுபிடிக்க முடிந்தது. பின்னர் ராகுல் சாஹர், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் என இளைஞர் பட்டாளம் மும்பை அணியிடம் உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், உலகத் தரம் வாய்ந்த டி 20 வீரர்கள் மற்றும் உற்சாகமான இளம் வீரர்கள் என பல்வேறு திறமைகளையும் மும்பை இண்டியன்ஸ் தனது அணியில் வைத்திருக்கிறது. வெற்றிக்கு திறமைகளை சமநிலைப்படுத்தும் திறன் முக்கியமானது. அதை மும்பை அணி மிகவும் சிறப்பாக செய்து வருகிறது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கூறினார்.
இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பெங்களூரை தளமாகக் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் டிராவிட், ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
"கடந்த காலத்தில், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு மாநில கிரிக்கெட் சங்கங்களிலிருந்து மட்டுமே கிடைத்தது. அதுவும் அவர்கள் தங்கள் மாநிலத்திற்கான ரஞ்சி டிராபிக்காக மட்டுமே விளையாடும் சூழ்நிலை இருந்தது. தற்போது ஐ.பி.எல் போட்டிகளில், கர்நாடகாவைச் சேர்ந்தவர், மும்பைக்கு விளையாடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு” என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
Also Read & watch | IPL 2020 இறுதிப்போட்டிக்கு பிறகு வீரர்களுக்கு பரிசுமழை…
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR