இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அதிக சிக்சர்களை அடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார். இந்த பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். 350 போட்டிகளில் தோனி 229 சிக்சர்களை அடித்துள்ளார் தோனி.
28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனியின் தலைமையின் கீழ் இந்தியா 2011 ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. தற்போது தோனி (MS Dhoni) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். இப்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மட்டும் அவர் விளையாடுகிறார். IPL போட்டிகளில் அதிக பதிப்புகளில் வென்றிள்ள அணிகளின் பட்டியலில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரண்டன் மெக்கல்லம் இரண்டாவது இடத்தில் உள்ளார். மெக்கல்லம் 260 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்துள்ளார். நியூசிலாந்தின் மிகச்சிறந்த லிமிடட் ஓவர்ஸ் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெக்கல்லம் 2016 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ALSO READ: Plant Trees என்று கேட்டுக் கொண்ட தோனியை கலாய்ப்பது ஏன்?
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் 287 போட்டிகளில் 149 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 172 ரன்களை அவர் எடுத்தார். 2008 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கில்கிறிஸ்ட் அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஐதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2009 இல் IPL தொடரை வென்றது.
இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். மற்ற மூவரைப் போலல்லாமல் இவர் இன்னும் இங்கிலாந்துக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். பட்லர் ஐ.பி.எல்லிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக லீக்கில் இவர் அறிமுகமானார். பின்னர் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு மாறினார். இப்போதும் அந்த அணியில்தான் விளையாடுகிறார்.
இலங்கைக்காக இதுவரை விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் குமார் சங்கக்காரர் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சங்கக்காரா 404 போட்டிகளில் 88 சிக்ஸர்களை அடித்திருக்கிறார்.
ALSO READ: MS Dhoni vs Virat Kohli: WTC தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் துவங்கிய புதிய விவாதம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR