உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது.
இதற்காக இங்கிலாந்துக்கு பயணிக்கவிருக்கும் இந்திய அணியினர் மும்பையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
"It's really, really exciting to be involved in the final, obviously to win it would be that much better"
One month out from the #WTC Final, anticipation is growing among the @BCCI and @BLACKCAPS stars pic.twitter.com/79uJx2RcQ2
— ICC (ICC) May , 2021
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் மோதுகின்றன. ஜுன் 18ம் தேதி தொடங்கும் இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, 2ம் இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான ஆட்டத்தை எதிர்கொள்ளும்.
Also Read | Italian Open 2021: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார் ரபேல் நடால்
இந்தப் போட்டி குறித்து பேசியுள்ள நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கெதிரான ஆட்டம் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, அது சவாலானதாக இருக்கும். அதே போல் இந்த போட்டியும் இருக்கும். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் உற்சாகமானது” என்று கேன் வில்லியம்சன் கூறினார்.
அதோடு, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிகள் உற்சாகத்தை அளித்தன. இறுதிப்போட்டிக்கு வருவதற்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது” என்று வில்லியம்சன் கூறினார்.
Also Read | ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR