IPL 2023: ஜியோ சினிமாவில் ஐபிஎல் 2023 இலவசமாக பார்ப்பது எப்படி?

ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில் அதனை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம். தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள்  ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 31, 2023, 05:12 PM IST
IPL 2023: ஜியோ சினிமாவில் ஐபிஎல் 2023 இலவசமாக பார்ப்பது எப்படி? title=

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த தொடரை ஜியோ சினிமா இந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 4K தரத்தில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் 2023-ஐ பார்வையாளர்கள் விரும்பும் கேமராவில் பார்த்து ரசிக்கும் அம்சத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜியோ சினிமா. மேலும், உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இலவசமாகவே இந்த ஐபிஎல் தொடரை பார்த்து ரசிக்க முடியும்.     

மொபைலில் இலவசமாக பார்ப்பது எப்படி?

நீங்கள் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க விரும்பினால், 2 வழிகள் உள்ளன. முதலில் நீங்கள் ஜியோ சினிமா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இரண்டாவது- ஜியோ சினிமா இணையதளத்திற்கு நேரடியாகச் சென்று போட்டியை ரசிக்கலாம். ஏர்டெல், ஜியோ, VI மற்றும் BSNL உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயனர்களும் அனைத்து போட்டிகளையும் ஆன்லைனில் இலவசமாகப் பார்க்க முடியும். இதற்காக அவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சேனல் லிஸ்ட் மற்றும் ஆன்லைனில் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்

ஐபிஎல் 2023-ஐ டிவியில் ஒளிபரப்புவதற்கான உரிமைகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிடம் உள்ளன. எனவே, இந்தியன் பிரீமியர் லீக் 2023-ன் அனைத்து போட்டிகளும் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். டிஸ்னி-ஸ்டார் ஐபிஎல்லுக்கான இந்தியாவின் முதல் 4கே டிவி சேனலையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4K ஆனது GT Vs CSK ஆனது அல்ட்ரா ஹை டெபினிஷனில் (4K) நேரடி ஒளிபரப்பு செய்யும்.

12 மொழிகளில் ஜியோ சினிமா 

இந்த முறை ஐபிஎல்லில், இந்தி, ஆங்கிலம் உட்பட 9 மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் 12 மொழிகளில் ஜியோ சினிமாவில் வர்ணனைகள் இருக்கும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டார் மற்றும் ஜியோ பற்றிய வர்ணனைகள் செய்யப்படும். பஞ்சாபி, ஒரியா மற்றும் போஜ்புரி ஆகிய மூன்று கூடுதல் மொழிகளிலும் ஜியோ வர்ணனையை கேட்கலாம்.
விளம்பர விற்பனையில் 60% ஜியோவால் கைப்பற்ற முடியும்

விளம்பர வருவாய்

விளம்பர விற்பனையின் அடிப்படையில் ஜியோ சினிமா டிஸ்னி ஸ்டாரை ஆதிக்கம் செலுத்த முடியும். ஐபிஎல் 2023-ல் கிடைக்கும் மொத்த விளம்பர வருவாயில் Viacom18-க்கு சொந்தமான இயங்குதளம் 60% ஈட்ட முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Viacom18-ன் OTT இயங்குதளமான JioCinema-வில் IPL ஸ்ட்ரீம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. போட்டியின் டிஜிட்டல் உரிமையை ரூ.23,758 கோடிக்கு வாங்கியுள்ளது.

மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா திட்டங்களின்படி, ஸ்டார் இந்தியாவின் ஐபிஎல் 2023 விளம்பர விற்பனை சுமார் $200-220 மில்லியனாக இருக்கும். அதே நேரத்தில் ஜியோ சினிமாவின் விளம்பர விற்பனை $330-350 மில்லியனை எட்டும். டிஜிட்டல் விளம்பர வருவாய் டிவி விளம்பர வருவாயைக் கடப்பது இதுவே முதல் முறை. ஐபிஎல் போட்டியின் 5 ஆண்டு தொலைக்காட்சி உரிமைக்காக ஸ்டார் நிறுவனம் ரூ.23,575 கோடி செலுத்தியுள்ளது.

59 நாட்களில் 74 போட்டிகள் நடைபெறும்

59 நாட்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் 10 அணிகளுக்கு இடையே மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும், 7 சொந்த மண்ணிலும், 7 எதிர் அணியின் மண்ணிலும் விளையாடும். 10 அணிகளுக்கு இடையே 70 லீக் ஆட்டங்கள் நடைபெறும். லீக் சுற்றுக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பிளேஆஃப் போட்டிகளுக்கான தேதிகள் 

லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்ததும் 4 ஆட்டங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு வரும். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஐபிஎல் தொடரின் 70 லீக் ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆஃப் அட்டவணை வெளியிடப்படவில்லை. ஆனால், குவாலிபையர்-1 மே 23ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 24 ஆம் தேதி எலிமினேட்டர் மற்றும் மே 26 ஆம் தேதி குவாலிஃபையர்-2 இருக்கலாம். இறுதிப் போட்டிக்கான தேதி மே 28-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குவாலிஃபையர்-1 புள்ளிகள் பட்டியலில் முதல்-2 அணிகளுக்கு இடையே இருக்கும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது அணிகள் எலிமினேட்டரில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2ஐ எட்டும். எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும், குவாலிஃபையர் 1ல் தோல்வியடைந்த அணியும் குவாலிஃபையர் 2ல் விளையாடும். குவாலிபையர்-2ல் வெற்றி பெறும் அணி, மே 28-ம் தேதி குவாலிபையர்-1-ல் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

மேலும் படிக்க | IPL 2023: எந்தெந்த அணிக்கு யார் யார் இம்பாக்ட் பிளேயர்... அதிரடி வீரர்களின் பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News