ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் தான் நினைவுக்கு வரும். இந்த இரு அணிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை நடைபெற்ற 14 ஐபிஎல் போட்டிகளிலும் 5 முறையும் மும்பை அணியும், 4 முறை சிஎஸ்கே அணியும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சீசனில் சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.
மேலும் படிக்க | பட்லரின் அதிரடியில் வீழ்ந்த மும்பை - தொடர்ச்சியாக 2வது தோல்வி
இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மும்பை போல தான் சிஎஸ்கே அணியும் பின்னடைவை சந்தித்து வருகிறது. சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.
மும்பை அணி இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுடனும் மோதி தோல்வியை சந்தித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. முதல் போட்டியில் தோற்றாலும் இரண்டாவது போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கும் இரு பெரிய அணிகளும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவின.
டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கையில் தான் 15 ஓவர்கள் வரை ஆட்டம் இருந்தது. ஆனால் அடுத்த 3 ஓவர்களில் 57 ரன்களை டெல்லி அணி வீரர்களுக்கு வழங்கினார்கள் மும்பை பந்துவீச்சாளர்களான டேனியல் சாம்ஸ் மற்றும் பாசில் தம்பி. நேற்றைய போட்டியிலும் கடைசி 5 ஓவர்களில் தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் மும்பை பேட்மேன்களை மிரட்டி விட்டனர். பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்கள் அவுட் ஆனார்.
சிஎஸ்கே அணியை பொறுத்த வரை பந்துவீச்சில் சொதப்பி வருகின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், லக்னோவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் சொதப்பியது. முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சாஹர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ஆட்டத்தில் அவர் களமிறங்க முடியாத நிலையில், அவர் மீண்டும் அணியில் விளையாட இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். அதேபோல சீனியர் பந்துவீச்சாளர்களான மில்னே மற்றும் ஜோடன் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாடுவது சந்தேகமே.
மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!
இப்படி பல நெருக்கடிகளுக்கு நடுவே மும்பை மற்றும் சென்னை அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக் கணக்கை தொடங்குவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR