இந்தியன்ஸ் பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நான்காவது ஆட்டத்தில் கேஎல் ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியும், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை லக்னோக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி அவர்களின் முக்கிய பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோரை இழந்துள்ளது. இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மில் உள்ளார் மற்றும் ரோவ்மேன் பவலின் வருகை ராயல்ஸின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | "நீ சிங்கம் தான்..." சிஎஸ்கே கேப்டனாக தோனியின் செயல்பாடுகள்...!
லக்னோவைப் பொறுத்தவரை, நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024ல் இடம் பெறுவதற்காக மிடில் ஆர்டரில் பேட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபார்மில் உள்ள தேவ்தத் படிக்கல் ராஜஸ்தானில் இருந்து எல்எஸ்ஜிக்கு வந்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் பேட்டர் நிக்கோலஸ் பூரன் 172.94 ஸ்ட்ரைக் ரேட்டில் 350 ரன்களுக்கு மேல் அடித்து 2023 ஐபிஎல் சீசனில் திருப்புமுனையாக இருந்தார். மேலும் மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற வீரர்கள் உள்ளதால் லக்னோ பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
.
இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி அமைந்துள்ளது. காரணம் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் பலம் வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் மாறி உள்ளது. இந்த போட்டி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறினார்.
Bumrah = perfection #OneFamily #MumbaiIndians | @Jaspritbumrah93 pic.twitter.com/4pfIjnDyla
— Mumbai Indians (@mipaltan) March 23, 2024
குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் பேட்டிங்கில் அவரது பார்மை தக்க வைத்து கொள்வது மிகவும் முக்கியமானது. கடந்த சீசனில் 157.80 ஸ்டிரைக் ரேட்டில் 890 ரன்கள் எடுத்தார் கில். இந்த ஆண்டு குஜராத் அணியில் பாண்டியா மற்றும் முகமது ஷமி இல்லாத நிலையில், அணியை எப்படி வழிநடத்த உள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே சமயம் மும்பை அணியில் காயம் காரணமாக சூர்யாகுமார் யாதவ் அணியில் இன்னும் இணையவில்லை. கடந்த ஆண்டு முழுவதும் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆண்டு விளையாட உள்ளார். அவரது வருகை மும்பை அணியை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ