மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 07:25 PM IST
  • சிஎஸ்கே தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து உள்ளது.
  • ஐதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
  • பிளே ஆப் கனவு பறிபோய் உள்ளது.
மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா? title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தது, சன்ரைசர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டியில் தோல்வியடைந்து இருந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இரண்டு அணிகளும் களமிறங்கியது.

 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரசிகர்கள்? மும்பை - சென்னை அணிகள் காரணமா?

சன்ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் ஆரம்பத்திலிருந்து அசத்தலாக பந்து வீசினர். குறிப்பாக தமிழக வீரர்கள் ஆனா வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டுகளை வீழ்த்தினர். நடராஜனின் துல்லியமான யார்கரில் ருதுராஜ் கிளீன் போல்டானார்.  மொயின் அலி 48 ரன்களும், ராயுடு 27 ரன்களும் எடுத்தனர். ஷிவம் டுபே 3, தோனி 3 என சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணியின் ரன் ரேட் குறைந்தது. 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து இந்த முக்கியமான போட்டியில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

 

எளிய இலக்கை எதிர்த்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் கூடுதல் பலமாக இருந்தது. கிட்டத்தட்ட 12 ஓவர்கள் வரை ஒரு விக்கெட்டுகளை கூட எடுக்க முடியாமல் சென்னை அணி தடுமாறியது. இது ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.  கிட்டத்தட்ட 6 பவுலர்களை பயன்படுத்தியும் சென்னை அணியால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஹைதராபாத் அணி 89 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது.  கேப்டன் கேன் வில்லியம்சன் 32 ரன்களில் வெளியேறினார், மறுபுறம் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 75 ரன்களை குவித்தார்.  அதிரடியாக ஆடிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 

 

கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணி இந்த ஆண்டு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.  இதனால் தற்போது சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் படிக்க | மும்பை அணி மிரட்டியது’ சிஎஸ்கே மூத்த வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News