Viral Memes On TVK President Vijay: தவெக தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் உதவிகளை வழங்கியது சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான நடிகர் விஜய் (TVK President Vijay) களத்திற்கு வர மறுக்கிறார் என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இந்த சம்பவத்திற்கு மேற்கொண்டு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இருப்பினும், நடிகர் விஜய் மக்களை ஏன் தனியாக அழைத்து நிவாரணம் கொடுத்தேன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீம் 1: இது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை குறிப்பிட்டு, தவெக தலைவரை எள்ளி நகையாடும் வகையிலும், விமர்சன ரீதியிலும் பதிவிடப்பட்ட ஒன்றாகும்.
மீம் 2: இன்னும் புத்தாண்டுக்கு சில நாள்களே இருப்பதால், முத்து படத்தின் பிரபலமான இந்த டெம்ப்ளேட்டை வைத்து கற்பனையாக நகைச்சுவைக்காக இந்த மீம் போடப்பட்டுள்ளது.
மீம் 3: களவாணி படத்தில் 'என்னை கட்டிக்கிறேனு சொல்லு தரேனு' என்ற டெம்பிளேட்டை வைத்து நகைச்சுவையாக பதிவிடப்பட்டுள்ளது. இதுவும் வைரலாகி வருகிறது.
மீம் 4: விஜய் களத்திற்கு வர மறுக்கிறார் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், தேர்தல் காலத்திலும் விஜய் இதைதான் செய்வார் போல... என நகைச்சுவையாகவும், விமர்சிக்கும் வகையிலும் இந்த மீம் போடப்பட்டுள்ளது.
மீம் 5: பிரபலமான இந்த வடிவேல் - சுந்தர் சி டெம்பிளேட்டில் வடிவேலுவாக விஜய்யை வைத்து, ஏரியாவுக்கு வா நிவாரணம் தரேன் என்ற வகையில் இந்த மீம் போடப்பட்டிருக்கிறது.
மீம் 6: விஜய் களத்திற்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் என சொல்லப்படும் நிலையில், தவெக தொண்டர்களை விமர்சிக்கும் வகையில் இந்த மீம் போடப்பட்டுள்ளது.
மீம் 7: நடுநிலையாளர்கள் கூட விஜய் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து பதிவிட்டுள்ளனர். அதில் இது வைரலாகி வருகிறது.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய விஜய், அவர்களுடன் அமர்ந்து பேசி நலம் விசாரித்தார். அப்போது விஜய் அவர்களிடம்,"உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து நான் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம். ஆனால் உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது" என கூறியதாக கூறப்படுகிறது.