IND vs SA: ஒருநாள் உலகக் கோப்பை 2023-ன் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தனது எட்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது இந்தியா. இதுவரை அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி இந்தியா மட்டுமே, மேலும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வெல்லும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பெறுவது உறுதி. இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி எளிதானதாக இருக்காது. டெம்பா பவுமாவின் தென்னாப்பிரிக்க அணி சிறந்த ஃபார்மில் உள்ளது. அது மட்டுமின்றி, 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் ஐந்து போட்டிகளை வென்றுள்ளனர்.
மேலும் படிக்க | இந்த வீக்னஸூ இருந்தும் இந்தியா இலங்கையை ஜெயித்தது எப்படி?
தென்னாப்பிரிக்கா கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் அவர்களின் உண்மையான சோதனை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இருக்கும். இந்தியா கடைசி போட்டியில் இலங்கையை 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். இந்த உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளையும், ஷமி 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அரையிறுதியில் இடம்பிடிப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இதுவரை ஏழு போட்டிகளிலும் விளையாடிய சில வீரர்களுக்கு ஓய்வு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், அவர்களுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் மற்றும் இஷான் கிஷன் போன்றவர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்வின் அல்லது தாக்கூர் சேர்க்கப்படுவது அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும், அதே வேளையில் இந்தியா ஒரு பாஸ்ட் பவுலர் இல்லாமல் விளையாடும். மேலும், பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்று ஷமி மற்றும் சிராஜின் ரெட்-ஹாட் ஃபார்ம், இவர்களின் பந்துவீச்சு எதிர் அணி வீரர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். புனேவில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடது கணுக்கால் காயம் அடைந்தார், அதன்பின் அவர் பெங் ஹர்திக்கிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I'll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I'm sure we'll… pic.twitter.com/b05BKW0FgL
— hardik pandya (@hardikpandya7) November 4, 2023
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய விளையாடும் உத்ததேச லெவன் அணி: ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்
மேலும் படிக்க | உலக்கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ