இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கும் முன்னர் கபில் தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் (IND vs Eng) இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் டான் லாரன்சின் விக்கெட்டை வீழ்த்தி டெல்லி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது 98 வது டெஸ்டில் திங்களன்று இந்த சாதனையை செய்தார்.
1994 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் ரிச்சர்ட் ஹாட்லியின் ரெகார்டை முறியடித்து கபில் தேவ் தனது 432 வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இதே நாளில் இஷாந்த் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் 300 விக்கெட் கிளப்பில் சேர்ந்துள்ளார். இஷாந்த் ஷர்மா இப்போது 98 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 32 க்கு மேல் உள்ளது.
இஷாந்த் ஷர்மா (Ishant Sharma) இதுவரை 11 முறை ஐந்து விக்கெட்டுகளையும் 1 முறை பத்து விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஜாகீர் கானுக்குப் பிறகு விரைவாக இந்த சாதனையை செய்த மூன்றாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் 311 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Congratulations on 300 test wickets to the workhorse of Indian cricket @ImIshant #INDvsENG pic.twitter.com/HuBLIOSK84
— Wasim Jaffer (@WasimJaffer14) February 8, 2021
ALSO READ: IND vs Eng,Day 3: 6 விக்கெட்டை இழந்த இந்தியா.. பாலோ ஆனை தவிர்க்க போராட்டம்
இந்திய பந்து வீச்சாளர்களில், 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளார்.
இந்த சாதனையை மிக விரைவில் செய்த பெருமை அஸ்வினைச் (Ravichandran Ashwin) சேரும். அவர் இந்த சாதனையை 54 போட்டிகளில் செய்து விட்டார். அவரைத் தொடர்ந்து கும்ப்ளே (66), ஹர்பஜன் சிங் (72), கபில் தேவ் (83), ஜாகீர் கான் (89) ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மாவால் ஆட முடியாமல் போனது. இப்போது அவர் இங்கிலாந்து தொடரில் மீண்டும் வந்துள்ளார். முன்னதாக இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் விளைவாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களுடன் முன்னிலை வகித்தது. இங்கிலாந்து ஃபாலோ-ஆன்-ஐக் கோரவில்லை. விரைவாக ரன்களை எடுக்க ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிபிலி ஆகியோர் களத்தில் இறங்கினர். இரண்டாவது இன்னிங்சில், ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, டான் லாரன்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்துள்ளது.
ALSO READ: IND vs Eng, Day 2: இரட்டை சதமடித்தார் Joe Root, ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 555/8
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR