கடந்த ஐபிஎல் போட்டியில் இருந்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய அவர், 10 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் இந்த ஆட்டம், இந்திய அணி 190 ரன்கள் என்ற மெகா இலக்கை வெஸ்ட் இண்டீஸூக்கு நிர்ணயிக்க உதவியது.
மேலும் படிக்க | 20 ஓவர் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் அரிய சாதனை
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், அணியில் இருக்கும் சக தமிழக வீரரான அஸ்வினுடன் கலகலப்பாக கலந்துரையாடினார். அவருடன் பேசும்போது, " இப்போது கிடைக்கும் இந்த சின்ன சின்ன மகிழ்ச்சி அவசியம். இந்த வெற்றிகள் தான் என்னை அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த செட்டப் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது கிடைக்கும் மகிழ்ச்சிகளைவிட அடுத்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இப்போதைக்கு என்னுடைய உட்சபட்ச இலக்கே அதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், ஏறத்தாழ 19 ஆண்டு கால பயணத்தை எட்டியிருக்கிறார். அவ்வப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோதும் கிரிக்கெட் விளையாடுவதை அவர் நிறுத்தவில்லை. தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்திருகும் அவர், எதிர் வரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிசிசிஐ வட்டாரங்கள் கூட, தினேஷ் கார்த்திக் நிச்சயம் இந்திய அணியில் இருப்பார் என்றும் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஜிம்பாப்வே தொடர்: தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ