Ambati Rayudu: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் (YSRCP) சேர்ந்த 10 நாட்களில் விலகுவதாக அறிவித்துள்ளார். இது ஆந்திரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் தற்போது ராயுடு அதற்கு விளக்கும் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு துபாயில் நடைபெறவிருக்கும் இந்தியன் லீக் டி20 (ILT20) சீசனில் தான் விளையாட இருப்பதாகவும், அதற்கு தான் அரசியல் கட்சியில் இருக்க கூடாது என்பதற்காகவும் விலகுவதாக தனது அறிவிப்பை X தளத்தில் தெரிவித்துள்ளார். ராயுடுவின் இந்த பதிவின் படி, இந்தியன் லீக் டி20 விதிகளின் படி அரசியல்வாதிகள் இந்த தொடரில் பங்கேற்பதை தடை செய்கின்றன. இந்நிலையில், ஒய்எஸ்ஆர்சிபியில் இருந்து ராயுடு திடீரென விலகி உள்ளார்.
I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.
— ATR (@RayuduAmbati) January 7, 2024
ராயுடு தனது X தளத்தில், "நான் அம்பதி ராயுடு, வரும் ஜனவரி 20 முதல் துபாயில் நடைபெறும் ILt20 இல் மும்பை இந்தியன்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன். தொழில்முறை விளையாட்டுகளில் விளையாடும் போது நான் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 28 அன்று முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதல்வர் கே நாராயண சுவாமி மற்றும் ராஜாம்பேட்டா மக்களவை உறுப்பினர் பி மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் ராயுடு கட்சியில் இணைந்தார். இருப்பினும், அடுத்த 10 நாட்களுக்குள் தற்போது கட்சியில் இருந்து விலகினார். கட்சியில் இருந்து விலகியவுடன் "YSRCP கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் நன்றி" என்று முன்னர் பதிவு செய்து இருந்தார் ராயுடு.
இந்தியன் லீக் டி20 போட்டியில் MI எமிரேட்ஸ் அணிக்காக ராயுடு விளையாட உள்ளார். ஜனவரி 19 முதல் பிப்ரவரி 17 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் விளையாடப்படும் 2019 சீசனுக்கான கேப்டனாக நிக்கோலஸ் பூரனை மும்பை நியமித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை மற்றும் சென்னை அணிக்காக விளையாடி உள்ள ராயுடு கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். அவர் தனது ஐபிஎல் பயணத்தை 2010ல் மும்பை இந்தியன்ஸுடன் தொடங்கினார் மற்றும் 2013, 2015 மற்றும் 2017ல் வெற்றி பெற்ற அணியிலும் இருந்தார். பின்னர், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) க்கு சென்றார், அங்கு அவர் தனது முதல் சீசனில் 2018ல் வெற்றியுடன் தொடங்கினார். அடுத்து 2023ல் சிஎஸ்கே கோப்பையை வென்ற போது ஓய்வை அறிவித்தார்.
எம்ஐ எமிரேட்ஸ் அணி: அக்கேல் ஹொசைன், அம்பதி ராயுடு, ஆண்ட்ரே பிளெட்சர், ஆசிப் கான், கோரி ஆண்டர்சன், டேனியல் மவுஸ்லி, டுவைன் பிராவோ, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஜோர்டான் தாம்சன், குசல் பெரேரா, மெக்கென்னி கிளார்க், முகமது ரஷித் கான், முஹம்மது வசீம், நிக்கோலஸ் பூரன், நோஸ்துஷ் கென்ஜிகே, ஒடியன் ஸ்மித், ட்ரெண்ட் போல்ட், விஜயகாந்த் வியாஸ்காந்த், வக்கார் சலாம்கெயில், வில் ஸ்மீட், ஜாகூர் கான்
மேலும் படிக்க | ஓய்வுபெற்றார் புஷ்பா வார்னர்... அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ